இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்புவதற்கு இது சரியான நேரம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து நாட்டில் வன்முறை வெடித்தது. இதனைத்தொடர்ந்து அதிபர் கோட்டாபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பி, ராணுவ ஹெலிகாப்டரில் மாலத்தீவிற்கு சென்று, அதன் பின்பு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கிருந்து கொண்டு தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.
இதனைத்தொடர்ந்து அவர் விரைவில் நாடு திரும்ப இருப்பதாக நாடாளுமன்ற பேச்சாளரான பந்துல குணவர்த்தன கூறியிருந்தார். இது குறித்து புதிய அதிபரான ரணில் விக்ரமசிங்கே தெரிவித்ததாவது, முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்புவதற்கு தற்போது சரியான நேரம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
அவர் நாட்டிற்கு திரும்ப வந்தால் எரிந்து கொண்டிருக்கும் நாட்டின் அரசியல் பதற்றம், மேலும் கொந்தளிக்கும் என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்து, அவர் தற்போது நாடு திரும்புவதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.