Categories
அரசியல் மாநில செய்திகள்

என் தலைமையில் ADMK..! EPS, OPS ஒன்றிணைவார்கள்.. ADMK மூத்த நிர்வாகியுடன் Sasikala ஆலோசனை..!!

அரசியலில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனுடன் நடத்திய சந்திப்புக்கு பின்  செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஒரு இயக்கம் என்று சொல்லும்போது சில நேரத்தில் தலைவர்களுடைய மறைவுக்குப் பிறகு கூட இது போல் நடந்தது உண்டு. ஆனால் பின்பு வந்து ஒரு காலகட்டத்தில் ஒன்றாக எல்லோரும் இணைந்தார்கள், அதேபோல இப்பவும் அது நிகழும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிச்சயம் நடக்கும்.

என்னை பொறுத்த வரைக்கும் நான் ஆரம்பத்திலே சொல்லிவிட்டேன். எந்த பக்கமும் நான் இல்லை; நான் தொண்டர்கள், தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் என்னுடைய செயல்பாடாக இருக்கும்.தொண்டர்களுடைய வரவேற்பும், பொது மக்களுடையவரவேற்பும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக பொதுமக்கள் வந்து ரொம்ப எதிர்பார்க்கிறார்கள் எங்களை, மக்களை  பொருத்தவரையில் சொல்வது திமுக அரசாங்கத்தில் அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னது கூட செய்யவில்லையே என்று கூறுகிறார்கள்.

அதே சமயத்தில் திமுக அரசாங்கம் அம்மா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம்…. ஏழை எளியவர்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார்கள். அதையெல்லாம் நிறுத்தப்பட்டு இருக்கிறது, அது எல்லாமே நான் செல்லும் இடங்கள் எல்லாம் மக்களை என்னிடம் சொல்கிறார்கள்.நாங்கள் திரும்ப வந்து நாங்கள் செய்யணும் என்று எடுத்துச் சொல்கிறார்கள். நிச்சயமாக நான் செய்வேன் என்பதையும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் ஏனென்றால் தொண்டர்களுடைய எண்ணம் எதுவோ அதுதான் நடக்கும் என தெரிவித்தார்.

Categories

Tech |