Categories
அரசியல் மாநில செய்திகள்

1 1/2கோடி தொண்டர்கள் இல்ல..! ஓபிஎஸ்ஸிடம் சொல்லுறேன்… ”அவரு”லாம் போய்டுவாரு ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் என்ன செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தான் சொல்ல வேண்டும். இது எல்லாமே வந்து ஆற்றில் நுரை பார்ப்பது போல, எனவே கீழ் மட்டத்தில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம்.அதனால் எடப்பாடியா, ஓபிஎஸ்யா, இதெல்லாம் வந்து நுரை. ஒரு காற்று அடித்தால் எல்லாம் போய்விடும். அதனால் அதைப்பற்றி பெரிதாக நினைக்க வேண்டும்.

1 1/2 கோடி தொண்டர்கள் என்று யாரு சொன்னார்கள், உண்மையான தொண்டர்கள் எத்தனை பேர் என்று ஆதார் கார்டு வைத்து பார்த்தால் தான் தெரியும். ஆக 1 1/2 கோடி தொண்டர்கள் எதுவும் கிடையாது. தொண்டர்களை பொறுத்தவரையில் புரட்சி தலைவருடைய உண்மையான வாரிசு தொண்டர்கள் தான், அவரே சொன்னது இது. இந்த நேரத்தில் தொண்டர்கள் அமைதியாக இருக்கவேண்டும்.

மேல்மட்டத்தில் நடக்கின்ற பிரச்சனைகளை பற்றி  கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை, இவை எல்லாம் காலத்தால் அழிந்துவிடும். அதிமுக ஒன்றிணைவதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என தெரிவித்தார்.

Categories

Tech |