Categories
அரசியல்

“இன்று தரமில்லாத செயலை செய்துள்ளார்” ஜெயக்குமாரை விளாசிய கோவை செல்வராஜ்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையத்தின் மாநில தலைவர் சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமாரும், ஓ. பன்னீர்செல்வம் சார்பில் கோவை செல்வராஜூம் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலில் வந்த கோவை செல்வராஜ் அதிமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து வந்த ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயக்குமார் ஆகியோர் கோவை செல்வராஜ் பக்கத்தில் அமர்ந்து கொண்டனர்.

அப்போது ஜெயக்குமார் அதிமுக கட்சியின் பெயர் பலகையை தன்னுடைய பக்கமாக இழுத்து வைத்துக் கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து குளறுபடுகளையும் நீக்கி முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று விரும்புகிறோம். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் பதிவு செய்யாவிட்டாலும் மற்ற 11 ஆவணங்களை இணைக்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் அதிமுக கட்சியின் சார்பில் கலந்து கொண்டோம். கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதே தெரியாது. அவரைப் பற்றி எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை செல்வராஜ், அதிமுக கட்சியில் நடந்த பல்வேறு விஷயங்கள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றார். மேலும் ஓபிஎஸ் அறிவுறுத்தலின் பேரில் தான் கலந்து கொண்டதாகவும், அதிமுக கட்சி பலகையை தன் பக்கம் இழுத்துக் கொண்டு ஜெயக்குமார் தரம் இல்லாத காரியத்தை செய்துள்ளார் என்றார்.

Categories

Tech |