ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அலைமோதியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன் சாவடியில் பழமையான ஊத்துக்கட்டு எல்லையம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் ஆடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடித்திருவிழா கடந்த 22-ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். அதன்பின் விழாவில் ஒன்பதாவது நாள் அன்று அம்மனுக்கு 10 லட்ச ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து ரூபாய் நோட்டுகளால் ஆன பணமாலை மற்றும் வளையல் மாலை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து அன்னதானப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பூவை ஞானம் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் கோவிலில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.