Categories
மாநில செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்…. 10 நாட்களுக்குள் அறிக்கை…. தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவு….!!!

நீதிமன்ற உத்தரவை 10 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள வேளச்சேரி மற்றும் தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் உள்ளது. இந்த வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை செய்தது. அப்போது நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து மார்ச் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதன் காரணமாக வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிபதிகள் உரிய காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யாத மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அதிகாரிகளுக்கு 25,000 அபராதம் விதித்தனர். மேலும் தலைமைச் செயலாளர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் 10  நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அறிக்கை தாக்கல் செய்யும் வரை தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

Categories

Tech |