Categories
மாநில செய்திகள்

10வருடங்களாக வளர்த்து வந்த செல்ல நாய்…. ஊர் ஊராக போஸ்டர் அடித்து தேடும் குடும்பத்தினர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் 10 வருடங்களாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாய் திடீரென மாயமான நிலையில் தங்கள் வளர்ப்பு நாயை  அந்த குடும்பம் நாகர்கோவில் வட்டார பகுதிகளில் தேடி வந்தது. இந்த நிலையில் கண்டுபிடிக்க முடியாததால் தற்போது முக்கிய சந்திப்புகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருக்கிறது. ஷேடா என பெயரிடப்பட்டுள்ள பிஸ்கட் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட அந்த நாட்டு சாதி நாய் ஆரஞ்சு மற்றும் நீல வண்ணத்தில் கழுத்தில் பெல்ட் அணிந்திருப்பதாக சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த 23ஆம் தேதி முதல் நாயை காணவில்லை எனவும் அதனை பார்த்தால் தங்கள் செல்போனில் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டு இரண்டு எண்களும் பதிவிடப்பட்டிருக்கிறது. வளர்ப்பு நாய்க்காக தெரு தெருவாக சுவரொட்டி ஒட்டி நாயை தேடி வரும் குடும்பத்தின் நாய் மீதான அக்கறை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றார்கள். இதற்கு இடையே இந்த சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Categories

Tech |