Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. 100 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்த தண்ணீர்…. சிரமப்படும் கிராம மக்கள்….!!

குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் அருகே பெரிய ஜோகிப்பட்டி அம்மன் கோவில் தெருவில் சாலை பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 100 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தேரிபட்டி, சாம்பல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 30-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதனால் உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |