Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை….. பெரும் பரபரப்பு….!!!!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தைமான எஸ்.ஏ சந்திரசேகர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தின் விளம்பரச் செலவுக்காக 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்காததால் அந்த விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் அல்லிக்குளம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம் சட்டப்படி குற்றம் என்ற திரைப்படத்தை விளம்பரச் செய்ய சரவணன் என்பவரிடம் தமிழ்நாடு விஷுவல் சிசிடிவி அட்வர்டைஸ்மென்ட் நிறுவனத்திடம் எஸ்ஏ சந்திரசேகர் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 40,000 முன் பணமாக கொடுத்துள்ளார். ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்ததால் மீதி பணத்தை எஸ் ஏ சந்திரசேகர் தர மறுத்துள்ளார். இதனால் எஸ்.ஏ சந்திரசேகர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று பொருள்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜப்தி செய்துள்ளனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் அவரை தடுத்துள்ளனர். இதனால் காவல்துறை உதவி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் பொருட்களை ஜப்தி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |