விழுப்புரம் அருகே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மிளகாய் அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி பகுதியை அடுத்த பேட்டையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வினோதமான பூஜையில் நடைபெற்றன.
அங்குள்ள கோவில் பூசாரியான அருள்பெரும்ஜோதி என்பவரின் மார்பு மீது உரல் வைத்து மாவு இடித்தனர்.
மிளகாய் பொடியை கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.