Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாம்புடன் வந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை…. மருத்துவமனையில் பரபரப்பு…!!

தொழிலாளியின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு பாம்பை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏளூர் ஓலப்பாளையம் பகுதியில் பழனி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி சோளத்தட்டை வெயிலில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சோளத்தட்டில் இருந்து வந்த கட்டு விரியன் பாம்பு பழனியின் காலில் கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பழனி பாம்பை அடித்து கொன்று விட்டார்.

இதனை அடுத்து உறவினர்கள் பழனியை ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பழனி அடித்து கொன்ற பாம்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |