Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோவில் விழாவில் குவிந்த பொதுமக்கள்…. நகையை அபேஸ் செய்த 2 பெண்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோவில் விழாவில் பெண்களிடம் நகை பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இரும்பேடு ஊராட்சி ஏ.சி.எஸ். நகரில் புதிதாக வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அங்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் லட்டு பிரசாதம், அன்ன பிரசாதம் ஆகியவற்றை வழங்கும் போது அதிகளவில் குவிந்துள்ளனர். அதனை பயன்படுத்தி பல பெண்களிடம் கூட்டத்திற்குள் புகுந்து அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளனர். இந்நிலையில் பெண்கள் சிலர் ‘திருடன் திருடன்’ என கூச்சலிட்டதும் தப்பி ஓடிய 2 பெண்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக ஆரணி பள்ளிக்கூட தெருவில் வசிக்கும் வெள்ளச்சி என்பவரிடம் 7 பவுன் நகையும், மெய்யூர் கிராமத்தில் வசிக்கும் ரமணியிடம் 3 பவுன் நகையும், ஹரிஹரன் நகரில் வசிக்கும் திலகம் என்பவரிடம் 2 பவுன் நகையும், பில்லூர் கிராமத்தில் வசிக்கும் பாலசுந்தர் என்பவரிடம் 5 பவுன் நகையும், மொரபந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் தமிழரசியிடம் 2 பவுன் நகையும் என 6 பெண்களிடம் நகை பறித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் பொதுமக்கள் பிடித்து கொடுத்த 2 பெண்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த பெண்கள் திருச்சி சமயபுரம் பகுதியில் வசிக்கும் கவிதா, லட்சுமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பெண்களையும் சமயபுரத்துக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் வந்திருந்தவர்கள் யார்? அவர்களிடம் திருட்டு போன நகை உள்ளதா? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |