மரக்கடையில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மர சாமான்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.