காவலர் தேர்வில் போலி சான்றிதழ்கள் மற்றும் தகுதியற்ற ஆவணங்கள் மூலம் பணிக்குச் செல்ல முயற்சித்தவர் விளையாட்டு வீரர்கள் 1000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன், பயர் மேன்,போன்ற பதவிகள் 8888 பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்ற 47 ஆயிரம் பேர் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர், இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 8,800 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களில் 1000 பேர் விளையாட்டு சான்றிதழ்கள் மூலம் விளையாட்டு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தது, கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து விளையாட்டு பிரிவின்படி 3 சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படாது, என சம்பந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல் அறிக்கை அனுப்பியது.
தேர்வர்கள் சமர்ப்பித்துள்ள சான்றிதழ் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் மூலம் வழங்கப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.
தேர்வர்களின் சான்றிதழ்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பொது பிரிவு அல்லது இட ஒதுக்கீடு பிரிவில் எடுத்துக்கொள்ளலாம், என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வர்கள் சமர்ப்பித்த சான்றிதழ் உண்மை தன்மை மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய தனியார் சங்கங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
போலி சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டது நிரூபணம் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காவலர் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மறுப்பு தெரிவித்திருந்தது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் குளறுபடி நிகழ்ந்திருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.