வாரிசு திரைப்படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.
இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பானது சென்னையில் நடந்து வந்தது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் விஜய் விசாகபட்டினத்திற்கு படபிடிப்பிற்காக சென்னையில் இருந்து புறப்பட்டார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூட்டிங் விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ள நிலையில் எந்த இடத்தில் ஷூட்டிங் எடுக்கப்படுகின்றது என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.