கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம்,கொடை தன்மையை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அரசு சார்பாக விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டு மற்றும் மூன்று ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சி, மூலிகைச் செடி கண்காட்சி ஆகியவை நடைபெறுகிறது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 27ஆம் தேதி பணி நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.