Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள நடவடிக்கை…. அமைச்சர் புது அப்டேட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |