நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. உலக அளவில் 130 மில்லியன் மெட்ரிக் டன்கள் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து வருகிறோம். இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசடைகின்றது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்றால் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் குறைக்க வேண்டும். அதன் காரணமாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஐ ஆர் சி டி சி விரைவில் இந்திய ரயில்வேயின் கேட்டரிங் துறையில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய உள்ளது.ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ரயில்வேயின் கேட்டரிங் துறையிலிருந்து தட்டுக்கள்,கரண்டிகள் மற்றும் பார்சல் பாக்ஸ்கள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பயணிகளுக்கு பாக்குமட்டை, மரம் மற்றும் அட்டை பெட்டிகளால் செய்யப்பட்ட பொருட்கள் மூலமாக உணவு வழங்கலாம் என மத்திய அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.