Categories
உலக செய்திகள்

மியான்மரில்…. 6 மாதத்திற்கு அவசர நிலை நீட்டிப்பு…. தகவல் வெளியிட்ட ராணுவ ஆட்சியாளர்கள்….!!

மியான்மரில் தேசிய அவசர நிலையை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க போவதாக ஜூண்டா ராணுவ ஆட்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகி அமைத்த ஆட்சியை ஜூண்டா ராணுவ படைகள் அதிரடியாக கவிழ்த்துள்ளது. இங்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி ஆட்சியை கவிழ்த்த ராணுவம், அங் சான் சூகி போன்ற அரசியல் தலைவர்களை கைது செய்தத்துடன் அவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. மியான்மரில் கடந்த ஆண்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு நடைபெற்ற போராட்டங்களில் மட்டும் பாதுகாப்பு படையினர் சுமார் 1500 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் சுமார் 8,800 பேரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கணக்கில் வராத எண்ணிக்கையில் பலர் சித்திரவதைக்குள்ளாகினர். பலர் மர்மமான முறையில் மாயமாகினர்.

கடந்த 2021 பிப்ரவரி மாதம் 1 முதல் நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கு போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகைக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். மேலும் தன்னிச்சையான கைதிகள் என மனிதாபிமானத்திற்கு எதிராக செயல்படுவதால் மனித உரிமைகள், ஆதரவாளர்கள் புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேசிய பாதுகாப்பு ஆணையம் முதல் ஆறு மாதத்திற்கு தேசிய அவசர நிலையை நீட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆறு மாதத்திற்கு அவசர நிலை தொடருமென சொல்லப்படுகின்றது.

Categories

Tech |