Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உத்தேச விடைகள் வெளியீடு…..!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்து தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் வெளியிட்டுள்ளது. தேர் பாளையத்தின் அதிகாரப்பூர்வ பழைய தளத்தில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் இந்த எழுத்து தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால் விண்ணப்பதாரர் மேல் முறையீடு செய்யலாம். வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘answer key challenge’என்பதை பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |