Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்த மேற்கூரை…. சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி இந்திராகாலனியில் 20 வருடங்களுக்கு முன்பு  தொகுப்பு வீடுகளானது கட்டப்பட்டது. அவற்றில் ஒரு வீட்டில் கூலித் தொழிலாளியான ராஜ் (60) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ராஜ் வீட்டில் மழைநீர் ஒழுக துவங்கியது. இதன் காரணமாக ராஜ் பக்கத்து வீட்டில் தனது குடும்பத்தினருடன் சென்று தங்கினார். இதையடுத்து நள்ளிரவில் ராஜ் வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதற்கிடையில் தண்ணீர் ஒழுக தொடங்கியதுமே பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டதால் ராஜூம் அவருடைய குடும்பத்தினரும் உயிர்தப்பினர். எனினும் ராஜூ வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள், 2 சிலிண்டர், டி.வி.பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி நாசமாகியது. இது தொடர்பாக தகவலறிந்த பள்ளபட்டி ஊராட்சி தலைவர் பரமன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் போன்றோர் சம்பவ இடத்திற்கு வந்து சேதமான தொகுப்பு வீட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Categories

Tech |