Categories
சினிமா தமிழ் சினிமா

40 இடங்களில் சோதனை….. சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில்…..  வருமான வரித்துறையினர் அதிரடி….!!!!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த அன்பு செழியன் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஆண்டவர் கட்டளை, மருது, வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். தமிழ் தமிழில் சில படங்களை வாங்கி விநியோகிப்பது மற்றும் திரைப்படங்களுக்கு பைனான்சியராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது வரியைப்பு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து வருமானவரித்துறையினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 5 மணி அளவில் அன்புச் செழியன் வீட்டிற்கு சென்ற வருமானத்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். அவரின் வீடு, அலுவலகங்கள், சகோதரியின் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதேபோல மதுரை காமராஜ் சாலையில் உள்ள அவரின் வீடு, மதுரை மேலமாசி வீதியில் உள்ள அலுவலகம் என 30 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை முடிந்த பிறகு இவர் முறைகேடு செய்துள்ளாரா? என்பது குறித்து தகவல் வெளியாகும் .

Categories

Tech |