வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகிய மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்துவருகிறார். இதில் பத்துதல திரைப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கியிருக்கும் ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் கடந்த 2017 ஆம் வருடம் வெளியாகிய முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருக்கிறார்.
அண்மையில் சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியாகிய பத்துதல படத்தின் போஸ்டரும், கிளிம்ப்ஸ் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இருக்கிறது. இதை சிம்பு தன் சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.