பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்தி 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். மேலும் அனைத்து பள்ளி நாட்களிலும் காலை சிற்றுண்டி உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.