Categories
மாநில செய்திகள்

தாய்ப் பாலில் விஷத்தை கலப்பார்களா?… ஆற்றில் ரசாயன கழிவுகள்…. கேள்வி எழுப்பும் பொதுமக்கள்….!!!!

மனித நாகரிகம் நதியிலிருந்து உருவாகி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் நதியை நம்பியே இந்தியச் சமூகங்களின் வேளாண்மை கிடக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நதிகளைக் கொண்டாடாத இலக்கியங்களே இல்லை என கூறலாம். சங்க இலக்கியம் உட்பட நவீன இலக்கியம் வரை தமிழகத்தின் காவிரியைப் பற்றிச் கூறாத குறிப்புகள் இல்லை. அப்படிப்பட்ட நதியை பாதுகாப்பது என்பது மனிதசமூகத்தினரின் கடமை. மனிதனின் பேராசையின் விளைவாக ஒவ்வொரு நதியும் வன் கொடுமை செய்யப்பட்டு வருகிறது. முன்பே மண்ணைத் திருடி நதியின் ஓட்டத்தை முடமாக்கிய சூழ்நிலையில், அவற்றில் ரசாயனக் கழிவுகளையும் கலந்து துன்புறுத்துவது வெட்கக்கேடானது ஆகும்.

கர்நாடக மாநிலத்தில் தென் பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக தென் பெண்ணை ஆற்றின் வழியே ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்றுகாலை ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தென் பெண்ணை ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 781 கன அடியாக இருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 கனஅடி ஆகும். இப்போது அணையில் 40.66 அடி நீர் இருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 908 கன அடி நீர் தென் பெண்ணை ஆற்றின் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தென் பெண்ணை ஆற்றின் கரையோரங்களிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து ரசாயன கழிவு நீர்கள் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் தென் பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகள் அதிகளவு செல்கிறது. ஓடும் அழகான ஆற்றில் ரசாயக் கழிவுகள் அதிகளவுப் பொங்கி வழியும் காட்சியை சகித்துக்கொள்ளவே முடியவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு தான் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரசாயன கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆனால் அதற்குள் மறுபடியும் தொழிற்சாலைகளின் கழிவு நீரை ஆற்றில் கலந்துவிடுகின்றனர். இக்காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவற்றில் யாராவது தாய்ப் பாலில் விஷத்தைக் கலப்பார்களா என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |