கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த முகமது சாலை ஓரமாக காரை நிறுத்தியுள்ளார்.
அதன் பின் காரிலிருந்து நான்கு பேரும் கீழே இறங்கி நின்றனர். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. வேகமாக பரவிய தீ கொழுந்து விட்டு ஏறிந்தது. இது பற்றி ஆசனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதன்பின் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எறிந்த தீயை அணைத்துள்ளனர். எனினும் கார் முற்றிலுமாக ஏறிந்து சேதமானது. காரில் இருந்து உடனடியாக நான்கு பேரும் இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார்கள். தீ விபத்திற்கான காரணம் பற்றி ஆசிரியர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயணைப்பு வாகனம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் திம்பம் மலைப்பாதை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. மேலும் ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தீயணைப்பு வாகனம் அங்கிருந்து சென்றது. போக்குவரத்து நிலைமையும் சீரானது மலைப்பாதையில் சென்றபோது திடீரென கார் தீ பிடித்து எறிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.