Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இந்த கல்லூரியில் சேர்ந்து ஏமார்ந்து விட்டோம்”…. ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் மாணவர்கள் கோரிக்கை…. பெரும் பரபரப்பு….!!!!!!!

சின்னசேலம் அருகே பங்காரம் எல்லையில் உள்ள எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகள் கடந்து 2016 ஆம் வருடம் கல்லூரியின் முன்பு உள்ள கிணற்றில் விழுந்து இறந்ததை அடுத்து அந்த கல்லூரியில் அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். அதன் பின் கல்லூரி நிர்வாகத்தினர்  கல்லூரியை நடத்த நீதிமன்றத்தை நாடி முறையிட்டுள்ளனர். இதனை அடுத்து கல்லூரியை மீண்டும் நடத்த அனுமதிக்க டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2018 – 19 ஆம் கல்வி ஆண்டில் மூன்று மாணவிகளும் 2019 – 20ஆம் ஆண்டில் 15 மாணவ, மாணவிகளும் சேர்க்கை  பெற்றுள்ளனர்.

ஆனால் இதுவரை வகுப்புகள் நடைபெறாததால் தங்களை வேறு கல்லூரியில் சேர்த்து விடக் கோரி பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் தமிழக அரசிற்கும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் போன்றோரிடம் மனு கொடுத்துள்ளனர். மேலும் இது பற்றி சின்னசேலம் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். இந்த சூழலில் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூலம் இரண்டு குழுக்கள் அமைத்து மேற்படி கல்லூரியின் உள்கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்து வருகின்ற ஐந்தாம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர் கபிலன், டாக்டர் கிருஷ்ணன் போன்றோர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று மதியம் 12:30 மணிக்கு கல்லூரிக்கு வந்தனர்.

அப்போது கல்லூரி நுழைவு வாயில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதன்பின் கல்லூரி நிர்வாகத்தினரை செல்போனில்  தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆஃப் என வந்ததால் சுமார் 2 மணி நேரம் நுழைவாயில் முன்பு நின்று கொண்டிருந்தார்கள். இதற்கு இடையே பல்கலைக்கழக குழுவினர் கல்லூரிக்கு வருவது அறிந்து அங்கு வந்த மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் அதிகாரிகளை திடீரென முற்றுகையிட்டு இந்த கல்லூரியில் சேர்ந்து ஏமாந்து விட்டோம் கல்வியை தொடர முடியாமல் தவித்து வருகின்றோம். அதனால் வேறு கல்லூரியில் எங்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். உங்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள். அதை பல்கலைக்கழகம் மற்றும் கோர்ட்டிலும் தாக்கல் செய்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் எழுதிக் கொடுத்த மனுவை வாங்கி அதிகாரிகள் கல்லூரி ஆய்வு செய்ய முடியாமல் ஏமாற்றுத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |