கரடு, முரடாக இருக்கும் சாலையில் பயணிக்க முடியாமல் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட 78 ஏரியா லைன்ஸ் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கொளப்பள்ளி அல்லது உப்பட்டிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் இருந்து பச்சை தேயிலையை எடை போடும் செட் இருக்கும் பகுதி வரை இருக்கும் பாதை கரடு முரடாக காட்சியளிக்கிறது.
எனவே அவசர காலகட்டங்களில் பொதுமக்கள் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நின்று விடுகிறது. எனவே தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.