நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவாமொய்த்ரா தன் விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்த வீடியோ வெகு வைரலாக பரவி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் சென்ற வாரம் முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றில் நேற்றைய கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு தொடர்பாக வாதங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரம் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தன் விலையுயர்ந்த கைப்பையை அருகில் வைத்திருந்தார்.
அப்போது அவர் அருகில் ஒரு உறுப்பினர் பேசி கொண்டிருந்தனர். அப்போது தன் பக்கம் கேமரா வருவதை கவனித்த மஹுவா மொய்த்ரா தன் விலையுயர்ந்த கைப்பையை கேமராவுக்கு தெரியாத வண்ணம் காலுக்கு இடையில் வைத்துவிட்டார். அந்த கைப்பையை சமூகதளவாசிகள் ஆராய்ந்தபோது, அதன் விலையானது 1.6 லட்சம் என தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. விலைவாசி உயர்வை பற்றி பேசிக் கொண்டு இருக்கையில், இதுபோன்ற விலையுயர்ந்த பையை வைத்து இருந்தால் சர்ச்சை ஆகிவிடும் என மறைத்து வைத்தார் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.