கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது. பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 300கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியின் 2 உடற்கூறாய்வு அறிக்கைகளும் ஜிப்மர் மருத்துவ குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 178 பேரின் நீதிமன்ற காவல் ஆக.16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் திருச்சி, கடலூர், வேலூர் மத்திய சிறைகளில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது ஆகஸ்ட் 16ம் தேதி வரை 178 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.