ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணம் வழங்குவதற்கு, புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாண்டிங் தலைமையில் ஒரு அணியும் கில்கிறிஸ்ட் தலைமையில் ஒரு அணியும் கட்டமைக்கப்பட்டன. இதில் பாண்டிங் அணிக்கு சச்சின் பயிற்சியாளராகவும், கில்கிறிஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் பயிற்சியாளராகவும் செயல்படத் தொடங்கினர்.
Ricky Ponting wanted a piece of Courtney Walsh's moon-ball! #BigAppeal pic.twitter.com/Wze1ZvK1nP
— cricket.com.au (@cricketcomau) February 9, 2020
இதையடுத்து மெல்போர்னில் உள்ள ஓவல் மைதானத்தில் புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த ஆட்டம் 10 ஓவர்கள் ஆட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
Six over mid-off, if you don't mind!
And Brian Lara retires on 30 👏 #BigAppeal pic.twitter.com/HtDYHILu2u
— cricket.com.au (@cricketcomau) February 9, 2020
பின்னர் களமிறங்கிய பாண்டிங் லெவன் அணிக்கு ஜஸ்டின் லாங்கர் – ஹெய்டன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். லாங்கர் 6 ரன்களிலும், ஹெய்டன் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் பாண்டிங் – வீராங்கனை லிட்ச்ஃபீல்டு இணை விளையாட வருகை தந்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் பாண்டிங் பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுக்கப்பட்டது.
14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த பாண்டிங் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேற, லாரா களமிறங்கினர். அத்தனை நேரமாக வயதாகிய வீரர்கள் ஆட்டமாக தெரிந்த போட்டி, லாரா களமிறங்கி தனது டிரேட் மார்க் ஷாட்டான கவர் டிரைட்களை அடித்து பறக்க ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத்தொடங்கினர்.
அதிலும் சைமண்ட்ஸ் வீசிய 9ஆவது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிப் போட்டியை சுவாரஸ்யப்படுத்தினார், லாரா. இறுதியாக 10 ஓவர்களின் முடிவில் பாண்டிங் லெவன் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களை எடுத்தது.
பின்னர் இடைவேளை நேரத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனையின் கோரிக்கையை ஏற்று, சச்சின் ஒரு ஓவர் பேட்டிங் செய்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் 105 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கில்கிறிஸ்ட் தலைமையிலான அணிக்கு கில்கிறிஸ்ட் – வாட்சன் நல்லதொரு தொடக்கத்தை கொடுத்தனர்.
Shane Watson goes after Wasim Akram!#BigAppeal | #BushfireBash pic.twitter.com/EJaYFmEEJy
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 9, 2020
முதல் மூன்று ஓவர்களில் இந்த இணை 49 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கில்கிறிஸ்ட் 17 ரன்களிலும் வாட்சன் 30 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஹாட்ஜ் ரன் எதுவும் எடுக்காமலும், யுவராஜ் சிங் 2 ரன்களிலும் வெளியேறினார்.
Unexplainable drama on the last ball #BushfireCricketBash | #BigAppeal pic.twitter.com/GruIphmzVA
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 9, 2020
பின்னர் சேர்ந்த எலீஸ் – சைமண்ட்ஸ் இணை அதிரடியாக ஆடியது. சைமண்ட்ஸ் 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேற, எலீஸ் – நிக் இணை சேர்ந்தது. கடைசி ஓவரில் கில்கிறிஸ்ட் லெவன் அணி வெற்றிபெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 13 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால், ஒரு ரன் வித்தியாசத்தில் பாண்டிங் லெவன் அணி வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியின் மூலம் இதுவரை 20 லட்சம் டாலருக்கும் மேலாக நிவாரண நிதி வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது