வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் குமரி கடல், மன்னர் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 245 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.