பாஜகவினர் நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் இல்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக கூறி விஜய் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனைகள் தொடர்ந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா கூறியிருப்பதாவது
“நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே சரத்குமாரின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஒன்று ஏற்பட்டது அதன் பின்னர் அவ்விடம் சூட்டிங் எதுவும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடந்ததால் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதைத் தவிர நடிகர் விஜய்க்கு எதிரான போராட்டம் அல்ல இது” எனக் கூறினார்.