Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இன்று (ஆகஸ்ட் 3) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

ஆகஸ்ட் 3ஆம் தேதி இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம். கொடை தன்மையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த விழா ஆகஸ்டு மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், மலர்க கண்காட்சி, மூலிகை செடி கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்,  கல்வி நிறுவனங்களுக்கும் இன்று 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |