சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித்தன்மைகள். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு என்று இருக்கக்கூடிய ஒரே கட்சி அண்ணா திமுக. இரண்டாவது அந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் ? அவர்களுக்கு சம வாய்ப்பு உண்டு. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருக்கும், அதே மாதிரி டாக்டர் ஹன்டே எல்லாரும் சேர்ந்து அந்த இயக்கத்தில் மேலே வந்தார்கள், அதுதான் அதனுடைய உயிர்.
ஒன்று ஏழைகளுக்காக இருக்கக்கூடிய கட்சி, இரண்டாவது அந்த கட்சி யார் வந்தாலும் எல்லாரையும் பொதுவாக மனிதர்கள் என பார்க்கக்கூடிய ஒரு இயக்கம். மொழி, இனம் அதெல்லாம் தலைவர் காலத்தில் இருந்தே யாரும் பார்த்ததில்லை. அந்த தனித்தன்மைகள் தான் உயிர். இப்ப நடுவில் வருகின்ற சச்சரவுகள் இதைப்பற்றி பெருசாக எடுத்துக்க வேண்டியது இல்லை. ஒற்றை தலைமை, இரட்டை தலைமை எல்லாம் முக்கியமில்லை, ஒற்றை தலைமை இருந்து என்ன சாதித்து விட்டார்கள் ?
தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கிறது. ஆனால் அண்ணா திமுகவிற்கு இருக்கின்ற வேறுபாடு என்னவென்றால் ? சாதாரண ஏழை, கூலி தொழிலாளி காலையில் எழுந்தால் ஏதாவது வேலை செய்தால் தான் அன்றையபிழைப்பு நடத்துகின்ற நிலையில் உள்ளவர்கள்…. நம்பிக்கையோடு சேரக்கூடிய ஒரு அரசியல் அமைப்பு என்றால் அது அண்ணா திமுக தான்.அதே மாதிரி யார் வேண்டுமானாலும் சேரலாம். எல்லோருக்கும் ஒரே வாய்ப்பு. இந்த இரண்டு தான் அதற்கு உயிர். மத்ததெல்லாம் உடம்பு தான் என தெரிவித்தார்.