சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்றைக்கு இருக்கின்ற நிர்வாகிகளுக்கு அதிமுகவின் அடிப்படை உண்மைகளே சரியா தெரியுதா? என்று தெரியவில்லை. ஏனென்றால் நாங்கள் அந்த காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கத்தை ஆரம்பித்தபோது அதுதான் அடிப்படை. அந்த அடிப்படை இன்றும் தமிழ்நாட்டிற்கு தேவை.
இப்போது உருவ அமைப்புகளே இன்றைக்கு மாறுது, சண்டை போடுது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களே மூன்று பிறவி எடுத்தவர். முதல் பிறவி, எம்.ஆர்.ராதா சூட்ட போது அடுத்த பிறவி, அப்புறம் நோய்வாய் பட்ட பிறகு மூன்றாவது பிறவி. அது போல உடலில் மாற்றம் வரலாம், அமைப்பில் மாற்றம் வரலாம், ஆனால் ஆன்மா என்றால் என்றைக்கும் இயக்கத்திற்கு உயிரோட்டம் உண்டு.
இடைக்கால பொதுச்செயலாளர், கடைகாலம் எல்லாம் வந்து தற்காலிகம். இது எல்லாம் ஒன்றும் நிரந்தரம் இல்லை. எடப்பாடி பொதுச்செயலாளர் என்பது தற்காலிகம் தான் நாம் பார்க்கவில்லையா ? புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் அவர் பொது செயலாளராகவா இருந்தார் ? ராகவனநந்தம் இருந்தார், பாவூர் சண்முகம் இருந்தார். யார் யாரையோ போட்டார்கள். பொதுச்செயலாளர் யார் என்பது முக்கியமல்ல. நாட்டு மக்கள் யாரு மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம் என தெரிவித்தார்.