Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 10.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

10-02-2020, தை 27, திங்கட்கிழமை,

பிரதமை காலை 09.45 வரை பின்பு துதியை பின்இரவு 06.18 வரை பின்பு தேய்பிறை

திரிதியை. மகம் நட்சத்திரம் மாலை 05.05 வரை பின்பு பூரம்.

மரணயோகம் மாலை 05.05 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2. ஜீவன் – 1.

சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

எம கண்டம்- 10.30 – 12.00,

குளிகன்- மதியம் 01.30-03.00,

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

மேஷம்

இன்று வரவு குறைவாக இருந்தாலும் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்களால் இல்லத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்துகொள்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

இல்லத்தில் வரவுக்கு மேல் செலவுகள் இருக்கும். உறவினர்களுடன் வீண் கருத்து வேற்றுமை தோன்றும். வியாபாரத்தில் மறைமுகமாக தொல்லைகள் இருந்தாலும்  லாபத்தில் குறைவு இருக்காது. சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று இல்லத்தில் அமைதியும் ஒற்றுமையும் இருக்கும். வயதில் மூத்தவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் சூழல்  இருக்கும். இன்று சேமிப்புகள் உயரும்.

கடகம்

இன்று செய்யும் அனைத்து செயல்களிலும் ஆர்வமின்றி காணப்படுவீர்கள். இல்லத்தில் பிள்ளைகளினால் அமைதியான சூழல் குறையும். பணி தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டிவரும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். அரசு சார்பாக எதிர் பார்த்து  இருந்த உதவி இன்று கிடைக்கும். வருமானம் பன்மடங்காகும்.

சிம்மம்

இன்றுஅணைத்து காரியத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமணம் போன்ற முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு புதிதாய் வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். வியாபாரம் தொடர்பாக வெளிவட்டார நட்புக்கள் வளரும். சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி

இன்று மனதில் கவலையும் குழப்பமும் ஏற்படும். பணியில் எதிர்பார்த்திராத இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழிலில் சிறிய மாற்றங்களை செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

துலாம்

தொழில் தொடர்பாக உங்கள் மரியாதையும் மதிப்பும் அதிகரித்திருக்கும். பணியில் கஷ்டமான விஷயங்களை கூட மிகவும் எளிதாக செய்து முடிப்பீர்கள். துணிச்சல் அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடி வரும். எதிர்பாராத பேனா வரவால்  கடன்கள்  குறையும்.

விருச்சிகம்

இன்று இல்லத்தில் மங்கலம் நிறைந்த நிகழ்ச்சிகள் நடந்தேறும்.  சகோதர சகோதரிகளின் வழியில் நன்மை நடக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு தகுந்தார்போல் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் பெறுவீர்கள். வெளியூர் செல்ல நேரிடும்.

தனுசு

இன்று எந்த செயலை செய்தாலும் சுறுசுறுப்பு இல்லாமல்  காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் தாமத நிலையை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சக  பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் குறைந்து நல்ல ஒரு முன்னேற்றம் காணப்படும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும்.

மகரம்

இன்று நீங்கள்  குழப்பத்துடனும் மன உளைச்சலுடன் இருப்பீர்கள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் செய்யும் எந்த செயலையும் பொறுமையாக செய்யவேண்டும். வெளி நபர்களிடம் பேசுவதை குறைத்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம் 

இந்த இல்லத்தில் திருமணம் போன்ற சுப முயற்சிகளில் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சிகள் நன்மையை கொடுக்கும். நண்பர்களை சந்திப்பது  ஆனந்தத்தை தரும். வீட்டின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடி வரும். பணியில் வேலைப்பளு இன்று குறையும்.

மீனம்

இனிய செய்தி இல்லம் தேடிவரும். பணியில் எதிர்பாராத நேரம் மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களிடம் இருந்த பிரச்சினைகள் அகலும். சொத்துக்களினால் நல்ல பலன்கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக நவீன கருவிகள் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |