Categories
அரசியல் மாநில செய்திகள்

கிளைமஸ் வரும்…! பிஜேபி தலையிடல…! இனிதான் சிக்கலே இருக்கு ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  சசிகலா – ஓபிஎஸ் ஒன்னு சேரனும் என்ற கோரிக்கை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் இப்போது அரசியலில் பல குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இன்னும் முடிவுக்கு வரவேண்டும், ஒரு நாடகம் நடக்கிறது என்றால் முடியும் போதுதான் அதன்  கிளைமஸ் வரும். இது இப்ப பாதியில் போய் அதிமுக அது ஆகுமா ? இது ஆகுமா என்றால் தெரியாது.

எனக்கு என்ன ஆதரவு இருக்கு ? என்னை பொறுத்தவரையில் அதே கொள்கை தான் என்னுடைய ஆதரவு. எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து தான் எம்.ஜி.ஆரை வெளியேற்றினார்கள். நான் அந்த காலத்தில் இருந்தே இருக்கிறேன். இது இன்னும் பல குழப்பங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். இது மாறாது, இன்னும் பல கட்டங்கள் இருக்கும், விரைவில் ஒரு தீர்வு வரும்.

நாடகம் யாரு நடத்துகிறார்கள் என்று நாம் சொல்ல முடியாது ?  குழப்பங்கள் தொடரும் என்பது தான் என்னுடைய கருத்து. பிஜேபி தலையிடவேண்டிய அவசியம் இல்லை, அப்படி ஒரு கருத்து இருந்தால் அது தவறானது. இப்போ நான் தான் உங்களை நியமிக்கிறேன், நீங்க வந்து என்னை பொதுச்செயலாளர் ஆக்கியுள்ளீர்கள், இதற்கு என்ன அர்த்தம் ? இன்றைய நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, அமைப்பில் இருப்பவர்கள் இருந்தாலும் சரி, முறைப்படி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா இல்லை ?  எல்லோரும் நியமனம் என விமர்சித்தார்.

Categories

Tech |