தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேகமான இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, இன்று கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.