கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் பொதுமக்கள் நீராட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.
Categories