தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட தொழிற்கல்வி பிரிவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் என்ற பாடத்திற்கு மாற்றாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தொழிற்கல்வி பாடப்பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள் என்ற பாடநூலை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வருகின்ற நாட்களில் ஆன்லைன் மூலமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு திறன்கள் பாடத்தை tnschools.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.