தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எப்போதும் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருவாரூரில் ONGC நிறுவனத்தால் போடப்பட்டுள்ள குழாயில் 2021ல் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே, அதை நிரந்தரமாக மூடுவது குறித்துதான் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காத.
புதிய கிணறு அமைப்பதற்கான நடவடிக்கை இல்லை. மக்களை பாதுகாப்பதற்காக நிரந்தரமாக அந்த கிணறு மூடப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட இந்த டெல்டா மாவட்டத்தில் கண்டிப்பாக எந்த புதிய கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார். என்றார்.