நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. அதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் சிலிண்டர் விலை ஏற்றம் என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க நேற்று அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது விலைவாசி குறையும் வரை பெண்களாகிய தங்களுக்கு நிம்மதி இருக்காது என்று காங்கிரஸ் எம்பி ரஜனி பாட்டீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பெண்கள், இல்லத்தரசிகளுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் இந்த காய்கறிகளை அணிந்து வந்ததாகவும், ஆனால் நிதியமைச்சர் இதையெல்லாம் கேட்க தயாராக இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவர் காய்கறிகளை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.