தமிழகத்தில் தற்போது திமுகவை விட பாஜக வேகமாக வளர்ந்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் ஒரு கோடி தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தனியார் நிறுவனம் மூலம் கிறிஸ்தவ மதமாற்றம் வேலைகள் தமிழகத்தில் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.