செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் புறக்கணிக்கப்பட்டது பற்றி உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் பாடகர் தெருக்குறல் அறிவு.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்ற 28ஆம் தேதி மகாபலிபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்கியுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் பங்கேற்க 186 நாடுகளில் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக கலை நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது உலகளவில் ஹிட்டான என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடகி தீயும் கிடாகுழி மாரியம்மாளும் பாடினார்கள். இந்த பாடலின் ஒரிஜினல் வெர்சனை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடினார்கள். ஆனால் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு பங்கேற்கவில்லை. இதனால் அவர் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு காரணம் அவர் அமெரிக்கா சென்றதால் வர முடியவில்லையாம்.
இந்த நிலையில் என்ஜாய் என்ஜாமி பாடல் விவகாரத்தில் தான் புறக்கணிக்கப்பட்டது பற்றி உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தெருக்குறல் அறிவு. அதில் அவர் கூறியுள்ளதாவது, என்ஜாய் எஞ்சாமி பாடலை நான் இசையமைத்தேன், எழுதினேன், பாடினேன், மற்றும் நடித்தேன். இதை எழுத யாரும் எனக்கு ஒரு ட்யூனையோ மெட்டையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை. இப்பொழுது இந்த பாடல் இருக்கும் அனைத்திற்கும் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தூக்கம் இல்லாமல் மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்திருக்கின்றேன்.
இது ஒரு சிறந்த டீம் ஒர்க் என்பது சந்தேகம் இல்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பது சந்தேகம் இல்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் வரலாறோ என் முன்னோர்களின் வரலாறோ இல்லை என்று அர்த்தம் இல்லை. என்னுடைய ஒவ்வொரு பாடலும் ஒடுக்குமுறையின் தழும்புகள் இருக்கும். இந்த பாடலில் இருந்ததைப் போலவே இந்த நாட்டில் பத்தாயிரம் நாட்டுப்புற பாடல்கள் இருக்கின்றது.
முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை ,அன்பு ,அவர்களின் எதிர்ப்பு, அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள் அழகான பாடல்களாக உங்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் உறங்கும் பொழுது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒரு போதும் அது முடியாது. ஜெய் பீம். இறுதியில் உண்மை எப்போதும் வெல்லும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பெரும் ஹிட்டானே இந்த பாடல் பிரமோஷனில் ஏற்கனவே தெருக்குறல் அறிவு புறக்கணிக்கப்பட்டார். இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் தனது மகள் தீயை ப்ரமோட் செய்தார். திருக்குறள் அறிவு புறக்கணிக்கப்பட்டார். இதற்கு அவர் கண்டனம் செய்திருந்தார் இயக்குனர் ரஞ்சித். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு பிறகு தெருக்குறல் அறிவு இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருப்பது திரைத்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.