Categories
தேசிய செய்திகள்

ரூ.25 கோடி பேரம் பேசுனாங்க: அமைச்சர் பகீர்….. அரசியலில் புதிய பரபரப்பு…..!!!!!

நடைபெற்று முடிந்த ராஜ்யசபா தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க தன்னிடம் 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர குதா கூறியுள்ளார். பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2020 ஆம் ஆண்டு முதலமைச்சர் அசோக் லேட்டுக்கு எதிராக எம்எல்ஏக்கள் திரட்டப்பட்டன.அப்போது அவருக்கு எதிராக செயல்பட என்னிடம் 60 கோடி பேரம் பேசினார்கள். நான் விலை போகவில்லை என்று கூறினார்.

ஆனால் தன்னிடம் பேரம் பேசியது யார் என்ற தகவலை ராஜேந்திர குதா தெரிவிக்கவில்லை. கடந்த 2018ல் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு குதா உட்பட ஆறு பேர் வெற்றி பெற்றனர். ஆனால், 2019ல் ராஜேந்திர குதா உள்ளிட்ட சிலர் காங்கிரஸ்  கட்சிக்கு தாவினர்.பின்னர் குதாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. குப்தாவின் இந்த பேச்சு ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |