தமிழகத்தில் திருநெல்வேலி,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் கலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கேரளாவில் கனமழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் , வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் அனைத்து வாகனங்களும் இரவு 9 மணி முதல் காலை ஆறு மணி வரை மூன்று நாட்களுக்கு தடை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மேலும் உதகை மற்றும் நீலகிரி பகுதிகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் கேரளாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.