தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற கரையோரங்கள், ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் “செல்பி” எடுப்பதை தவிர்க்க வேண்டும்.