இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர்இயக்கத்தில் கமல் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து விஜய்யின் தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். மேலும் தளபதி 67 பட வேலையை தொடங்கி 10 நாட்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தார். இதனால் விஜய் ரசிகர்கள் அவ்வபோது தளபதி 67 படத்தின் அப்டேட் கிடைக்கும் என மகிழ்ச்சியில் இருந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது, நான் சமூக வலைதளங்களில் இருந்து குட்டி பிரேக் எடுக்கின்றேன். என் அடுத்த பட அறிவிப்புடன் விரைவில் மீண்டும் வருவேன் என கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி ஒரு திடீர் முடிவு?, தளபதி 67 திரைப்படம் தான் காரணமா?, பட வேலையில் எந்த தொந்தரவு இல்லாமல் நடக்க வேண்டும் என இப்படி பிரேக் எடுத்து இருக்கின்றாரா? என்பது போல கூறி வருகின்றார்கள். மேலும் சீக்கிரமாக திரும்பி வாங்க லோகேஷ் என கேட்டு வருகின்றார்கள் ரசிகர்கள் குறிப்பிடத்தக்கது.
Hey guys ✨
I'm taking a small break from all social media platforms…
I'll be back soon with my next film's announcement 🔥
Till then do take care all of you..
With love
Lokesh Kanagaraj 🤜🏼🤛🏼— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 1, 2022