TNPSC முறைகேடு தொடர்பாக CBCID போலீஸ் காவலில் இருக்கும் ஜெயக்குமார் பல்வேறு முறைகேடுகளை வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
குரூப் 4 முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருக்க கூடிய ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதே போல கைது செய்யப்பட்ட ஓம்காந்தனையும் ஒன்றாக வைத்து கிடுபிடி விசாரணைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 2 பேரையும் ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய அழைத்துச் சென்றதில் முறைகேடு எப்படி நடந்தது என்று நடித்துக் காட்டியுள்ளனர்.அதனை சிபிசிஐடி போலீசார் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.
மேலும் சிபிசிஐடி விசாரணையில் அரசு பணிகளை 4 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் முக்கியமான இடைத்தரகராக இருந்த ஜெயக்குமார் இந்த பணம் அனைத்து இடைத்தரகர்கள் , முறைகேடு செய்த கும்பலுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 35 பேர் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.